Sunday, 8 October 2017

நினைவாற்றலை அதிகரிக்க என்ன செய்யலாம்?

மனிதனின் நினைவாற்றலுக்கும் மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. உண்மையில் மனதை எந்தளவுக்கு ஒரு முகபடுத்துகின்றோமா அந்தளவிற்கு எங்களது ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும்.
அடிப்படை நினைவாற்றல் செயற்பாட்டை மனதின் ஒருநிலைப்பாட்டை மையமாகக் கொண்டு விபரிக்க முடியும். யோகா பயிற்சிகளின் மூலம் நினைவுச் செயற்பாட்டை அதிகரிக்க முடியும். அறிவு பலமாக அமையாது, சரியான அறிவே சக்தியாக கருத முடியும்.
இந்தப் பகுதியில் நினைவாற்றலை அதிகரிப்பதற்கு எவ்வாறான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும், அதற்கான ஏதுக்கள் பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளது.
மனதை ஒருநிலைப் படுத்துவதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்க முடியுமா? ஆம், மனதை ஒருமுனைப்படுத்துவதன் மூலம் மூளைக்கு குறியேற்றப்படும் தரவுகளின் அளவினை வெகுவாக அதிகரிக்க முடியும்.
மனதை ஒருநிலைப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான, சக்தி வாய்ந்த மூளையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அநேகமானவர்கள் தங்களது நினைவாற்றறை விருத்தி செய்வதில் சிரத்தை காட்டுகின்றனர். அடிப்படை நினைவுத் தொழிப்பாடு மற்றும்  மனதை ஒருநிலைப்படுத்தல் ஆகியன சிறந்த கலவையை உருவாக்குகின்றன. மூளையில் தகவல்களை ஆழமாக குறியேற்றுவதன் மூலம் தேவையான நேரத்தில் வேகமாக அவற்றை ஞாபகப்படுத்திக்கொள்ள முடிகிறது.
நினைவாற்றலை விருத்தி செய்வதற்கு பின்வரும் அடிப்படைக் காரணிகள் முதன்மையானவை. அடிப்படை நினைவு தொழிற்பாட்டை சீராக மேற்கொள்வதற்கு முதலாவது,
பத்து கோப்பை நீர் பருக வேண்டும்.
நாள் ஒன்றுக்கு 6-8 மணித்தியாலம் உறங்க வேண்டும்.
நினைவாற்றலை அதிகரிக்கக் கூடிய உணவுகளை வகைளை உட்கொள்ளல்.
பழங்கள், காய்கறி வகைகள்  நினைவாற்றலை அதிகரிக்கும் விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ளல் ஏனெனில் காய்கறி பழ வகைகள் சமிபாடடைவதற்கு இந்த மாத்திரைகள் உதவியாக அமைகின்றன.
இரண்டாவது, ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட பயிற்சி முறைகளை பின்பற்றுதல்
மூன்றாவதாக மூளையில் குறியேற்றம் செய்வது தொடர்பிலான பயிற்சிகளை மேற்கொள்ளுதல். ஆரோக்கியமான மூளைகளில் மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் அதிகளவான தரவுகளை உள்ளீடு செய்ய முடியும்.
அடிப்படை நினைவுத் தொழிற்பாடு, மூளை குறியேற்றம் ஆகியவற்றில் போதியளவு பயிற்சி பெற்றுக் கொண்டதன் பின்னர் மனதை ஒரு நிலைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்த முடியும். சீரிய முறையில் மனதை ஒழுங்கு படுத்துவதன் மூலம் இலகுவில் பாடங்களை கற்றுக்கொள்ள முடியும்.
யோகா பயிற்சி மனதை ஒருநிலைப் படுத்துவதற்காக மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். தியானம், மனதை ஒருநிலைப்படுத்தல் மற்றும் சிந்தனைக் கூர்மை போன்றவற்றை யோகாப் பயிற்சி மூலம் விருத்தி செய்ய முடியும்.
யோகா பயிற்சிகளின் மூலம்
1. நினைவாற்றலை அதிகரிப்பதற்கு தேவையான மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு
2. மூளையில் தகவல்களை காத்திரமான குறியேற்றம் செய்தல்
அநேகமான யோகா பயிற்சிகள் உடல், உள்ளம் மற்றும் ஆத்மா ஆகியவற்றை ஒன்றிணைக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது.
மனதை ஒருநிலைப்படுத்துவதன் மூலம் எவ்வாறு நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என கேள்வி எழுப்பக்கூடும். ஆரோக்கியமான மூளைகளில் தகவல்களை குறியேற்றம் செய்வதன் மூலம் சிறந்த நினைவாற்றலை பெற்றுக்கொள்ள முடியும்.
மூளைக் குறியேற்று முறைகள்
ஆரோக்கியமான மூளையில் அதிகளவான தரவுகளை குறியேற்றி வைக்க முடியும். ஆரோக்கியமான சக்தியான மூளையின் மூலம் கேட்ட மாத்திரத்தில் தரவுகளை ஞாபகப்படுத்தி பதில்களை வெளியிட முடிகின்றது.
நினைவாற்றலை விருத்தி செய்ய விரும்பும் பயிலுனர்கள் மாதமொன்றுக்கு மூன்று மூளைக் குறியேற்று செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும். மூளைக் குறியேற்று பயிற்சிகள் மிகவும் இன்றியமைதாதவை.
மேலதிக ஆற்றல்கள்
பின்வரும் பயிற்சிகளின் மூலம் சிறந்த ஞாபக சக்தியைப் பெற்றுக் கொள்ள முடியும்
1.  அடிப்படை நினைவுத் n;தாழிற்பாடு
2.  நிரூபிக்கப்பட்ட குறியேற்ற வழிமுறைகள்
3.  குறியேற்று திறமையை விருத்தி செய்வதற்கான பயிற்சிகளில் ஈடுபடுதல். கூடுதலான தொடர் பயிற்சியின் மூலம் நிறைவாற்றலை பாரியளவில் விருத்தி செய்ய முடியும்.
மனதை ஒருநிலைப்படுத்தல் மற்றும் சிந்தனை கூர்மை ஆகியவற்றின் மூலம் நினைவாற்றலை விருத்;தி செய்ய முடியும்.

Windows

சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தான் இந்த Windows 8 மென்பொருள். விண்டோஸ் 8 மென்பொருளை அடுத்த வருடம் வெளியிட உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

Tuesday, 7 January 2014

சில சொற்களும் பயன்படுத்தும் விதத்தில் அவற்றின் வேறுபாடும்.

பண்டிகை - வீட்டில் கொண்டாடப்படுவது
விழா - வெளியிடத்தில் கொண்டாடப்படுவது

குழாம் - சிறு கூட்டம்
கூட்டம் - பலர் முறையாகக் கூடியிருப்பது
கும்பல் - முறையின்றிக் கூடுவது

பசுப் பால் - பசுவினது பால்
பசும் பால - பசுமையான பால்

இவன் - இங்கே இருப்பவனை குறிப்பிடுவது
இவண் - இங்ஙணம்

# நான் இத்தனை நாட்களாக பசுப் பால் என்று பயன்படுத்த வேண்டிய இடத்தில் பசும்பால் என்றும், கும்பல் என்று பயன்படுத்த வேண்டிய இடத்தில் கூட்டம் என்றும் தான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
-கனா காண்கிறேன்

Tuesday, 17 July 2012

suma renganath


சுமா ரங்கநாத்தை நினைவிருக்கிறதா... தொன்னூறுகளின் ஆரம்பத்தில் பெரிய அளவில் வருவார் என்று பேசப்பட்ட நடிகை. முதல் படம் புதுப்பாட்டு (எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நினைக்கிறே... பாட்டு ஞாபகத்துக்கு வருதா...) அதன் பிறகு விஜயகாந்த் ஜோடியாக மாநகரக் காவல் படத்தில் நடித்தார்.
தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தவர், இந்தியில் பிஸியானார். ஃபாரெப், ஆ அப் லோட் சலேன் என வெற்றிப் படங்களில் நடித்தவர், மலையாளப் படங்களிலும் நடித்தார்.
2006-ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அது சீக்கிரமே விவாகரத்தில் முடிய, மீண்டும் கன்னடப் படங்களில் பிஸியாகிவிட்டார்.
அவரை தமிழுக்கு மீண்டும் அழைத்து வருகிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன். அஜீத் நடிக்கும் புதிய படத்தில் இவருக்கு முக்கிய வேடமாம்.
தனது தமிழ் மறுபிரவேசம் பற்றி சுமா (சுமன் ரங்கநாதன்) கூறுகையில், "பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது தமிழ் சினிமா பக்கம் வந்து. இத்தனைக்கும் நன்றாக தமிழ் பேசத் தெரிந்த நடிகைதான் நான். எனக்கான டப்பிங்கை கூட நான்தான் பேசுகிறேன்.
பாலித் தீவில் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தப் படத்தில் ஒரு பத்திரிகையாளராக நடிக்கிறேன். பெங்களூரில் கடந்த சனிக்கிழமை முதல் காட்சி எடுத்தார்கள். ரொம்ப வித்தியாசமாக உணர்ந்தேன்," என்றார்.

Monday, 16 July 2012

விஜயகாந்த்தை விட மாட்டேன், தேமுதிக ஜெயித்த தொகுதிக்கெல்லாம் போவேன்: சரத்குமார்#########வளர்த்த கடா மார்ல பாயுது....(அடங்காத காளை ஒன்னு அடி மாடா போனதடி கண்மணி என.